குனு இயங்கு தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது - குனு ஒரு கட்டற்ற மென்பொருளாகும்.

குனு என்றால் என்ன?

யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை உருவாக்கிட 1984 ம் ஆண்டு துவக்கப் பட்டத் திட்டம் குனுத் திட்டமாகும். இவ்வியங்கு தளம் கட்டற்ற மென்பொருளாகும். இதற்கு குனு அமைப்பென்று பெயர்.

குனுவின் கரு பூர்த்தியடையாததால் லினக்ஸ் கருவுடன் பயன்படுத்தப் படுகிறது. இன்று பலக் கோடிப் பேர் பயன்படுத்தும் இந்த குனு மற்றும் லினக்ஸின் கூட்டமைப்பிற்கு குனு/ லினக்ஸ் என்று பெயர். (சில நேரங்களில் இக்கூட்டமைப்பு லினக்ஸ் எனத் தவறாக அழைக்கப் படுகின்றது.)

குனு/ வினக்ஸின் எண்ணற்ற வழங்கல்கள் கிடைக்கப் பெறுகின்றன. நூறு விழுக்காடு கட்டற்ற மென்பொருளாலான அதாவது பரிபூரண சுதந்தரத்தினை மதிக்கத்தக்க குனு/ லினக்ஸ் வழங்கல்களைப் பயன்படுத்துமாறு நாங்கள் பரிந்துரை செய்கின்றோம்.

“குனு யுனிக்ஸல்ல ” என்பதன் பெயர்ச் சுருக்கமே குனு ஆகும். கு-நூ என இது உச்சரிக்கப் படுகிறது.விளங்'கு' எனும் போது எழும் குற்றியலுகரத்தைப் போல் இதிலுள்ள 'கு' ஒலிக்கும்.

கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன?

கட்டற்ற மென்பொருள்” என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்தரத்தினை அடிப்படையாகக் கொண்டது. இதனை “இலவசமாகக்” கருதாமல் “சுதந்தரமாகத்” தாங்கள் கருத வேண்டும்.

இது மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அம் மென்பொருளை இயக்க, படியெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்தக் கூடிய உரிமைகளைப் பற்றியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் பயனொருவருக்கு அதன் மீதுள்ள நான்கு வகையான சுதந்தரத்தைப் பற்றியது:

  • எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்தரம். (முதலாவது சுதந்தரம்).
  • நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக் கேற்றாற் போல் ஆக்கிக் கொள்ளக் கூடிய சுதந்தரம். (இரண்டாவது சுதந்தரம்). முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
  • பிறரும் பயனுற வேண்டி படியெடுத்து பகிர்ந்துக் கொள்ளக் கூடிய சுதந்தரம். (மூன்றாவது சுதந்தரம்)
  • ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்தரம். முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும். (நான்காவது சுதந்தரம்)

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை என்றால் என்ன?

குனு திட்டத்திற்கு அமைப்பு ரீதியான ஆதரவு நல்குவது கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (க.மெ.அ) ஆகும். க.மெ.அ விற்கு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளிடமிருந்து நிதியுதவிச் சிறிய அளவில் கிடைக்கிற பொழுதும் தங்களைப் போன்ற தனிநபர்களின் தொடர்ச்சியான ஆதரவிலேயே இயங்கி வருகின்றது.

க.மெ.அ வில் அங்கத்தினர் ஆவதன் மூலமாகவோ, ஆவணங்கள் முதலியவற்றை வாங்குவதன் மூலமாகவோ அல்லது நிதியுதவி அளிப்பதன் மூலமாகவோ இதன் வளர்ச்சிக்குத் தாங்கள் உதவலாம். தங்களின் நிறுவனம் வர்த்தக நோக்கில் கட்டற்ற மென்பொருளினைப் பயன்படுத்தினால், ஸ்தாபன வள்ளலாவதன் மூலமாகவோ அல்லது குனு மென்பொருளின் டீலக்ஸ் வழங்கல்களை வாங்குவதன் மூலமாகவோ க.மெ.அ வினைத் தாங்கள் ஆதரிக்கலாம்.

கணினிகளில் மென்பொருட்களைப் பயன்படுத்த, கற்க, நகலெடுக்க, மாற்ற மற்றும் மறு விநியோகம் செய்யவும், கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்தும் பயனர்களின் உரிமங்களை பாதுகாக்கவும் உறுதிக் கொண்டுள்ள க.மெ.அ வினை குனு திட்டம் ஆதரிக்கின்றது. தனியொரு ஏகாதிபத்தியத்தின் தடையின்றி இணையத்தில் பேச்சு, பத்திரிக்கை மற்றும் அமைப்புகளுக்கானச் சுதந்தரத்தினையும், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களுக்காக தகவல்களை உருதிரித்து பயன்படுத்துவதற்கான உரிமத்தினையும் , மென்பொருள் இயற்றுவதற்கான உரிமத்தினையும் நாம் ஆதரிக்கின்றோம். இது குறித்து மேலுமறிய கட்டற்ற மென்பொருள், கட்டற்ற சமூகம் என்ற புத்தகத்தின் துணையினை நாடவும்.

கட்டற்ற மென்பொருள் ஆதரவு செய்தி பெற விழைக

குனு மற்றும் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை பற்றிய மாதாந்திர இதழ்

 

மேலும் விவரங்களுக்கு

குனு செய்திகள்

The FSF is taking nominations for its two annual awards, the Award for the Advancement of Free Software and the Award for Projects of Social Benefit. Submit your nominations for the 2008 Free Software Awards -- Nominations are requested by 31 October 2008.

The FSF has published an article revealing the restrictions Apple is using to block GPLv3-covered software from its iPhone platform, to prevent users from sharing and modifying free software on their portable computers. Please read and share the article with your friends, family, colleagues and collaborators.

Read and share these 5 reasons to avoid iPhone 3G with friends, family and coworkers. The iPhone's DRM prevents free software from being run on it at all, and gives Apple the authority to determine what can legally be installed by anyone on their own mobile computer.

ஏனையச் செய்திகள் மற்றும் குனு செய்திகள் பகுதியில் காணக்கிடைக்கும் செய்திகள் குறித்த விவரங்களை அறிய புதியவை பக்கத்தின் துணையினை நாடவும்.

நடவடிக்கை எடுக்க

ஏனைய நடவடிக்கைகள்

back to top

மொழிபெயர்ப்புகள்